அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழு புதிய உறுப்பினர்கள் தெரிவு….

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் (அம்பாறை வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலை) புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் பிரதேச சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு இன்று (01.04.2022) இடம்பெற்றது.
இதன்போது தலைவர் – DR. நசீர் (DMO), செயலாளர் – திரு.பிரகாஷ், உப செயலாளர்- திரு.கரண்ராஜ்
பொருளாளர்- திரு.கருணாகரன் அவர்களும் மற்றும் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
மேலும் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்காக சிறந்த முறையில் செயற்பட்டு வந்த பழைய அபிவிருத்தி சங்கத்தினர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதுடன்.
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவாக தெரிவு செய்யப்பட்டுள்ள குழு உறுப்பினர்களுக்கு மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.