இலங்கை
தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு பொன்விழாநிகழ்வு: திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியில்…..

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியின் 50ஆண்டு பொன்விழா கொண்டாட்டமானது தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழாவை முன்னிட்டு செழிப்புமிக்க வீட்டு பயிர்த்தோட்டம் ஒன்று சுபீட்சமிக்க எதிர்காலமொன்று என்னும் என்ன கருக்கேற்ப பொருளாதார ரீதியில் பெறுமதிமிக்க விவசாயப் பயிர்களையும் உரப்பொதிகளையும் வாடிக்கையாளப்பொதுமக்களுக்கு வங்கி நிறுவாகத்தினரால் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் விசேட அதிதியாக கலந்து கொண்டார் மேலும் இன் நிகழ்வில் வடகிழக்கு பிராந்திய உதவிமுகாமையாளர் மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் மற்றும் அம்பாறைமாவட்ட ஏனைய தேசிய சேமிப்பு வங்கிகளின் முகாமையாளர்களும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.