அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் 2018,2019,2020 ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு விடுக்கும் அறிவித்தல்…

ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக 2018,2019 மற்றும் 2020 ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள ( Yes என பெறுபேற்றுத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள ) மாணவர்களது விபரங்கள் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனம் வழங்கும் நோக்கத்திற்காக கிழக்கு மாகாணக் கல்வியமைச்சினால் கோரப்பட்டுள்ளன.
எனவே அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்விகற்ற 2018,2019 மற்றும் 2020 ஆண்டுகளில் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆக தோற்றிய எவராவது விரும்பினால்,
தங்களது விபரங்களை, க.பொ.த. உயர்தர பெறுபேற்றுத்தாள் (Original) மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி, தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தப்பட்ட பிரதி என்பவற்றுடன் (16.03.2022) புதன்கிழமை அதாவது நாளை காலை 08.30 மணி முதல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பாடசாலை வளாகத்தில் சந்தித்து உரிய ஆவணங்களை வழங்கலாம் என அறியத்தருகின்றார்.