ஆலையடிவேம்பு
இலவசமாக ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 ,O/L மாணவர்களுக்கு மாதாந்தம் மாதிரி பரீட்சை வினாப்பத்திரங்கள், சிறப்பு குறிப்புக்களின் தொகுப்பு பிரதி செய்து வழங்கல்.

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களை O/L இற்கு தயார் படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாடசாலை ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை அதிபர் அனுமதியுடன் திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி பரீட்சை வினாப்பத்திரங்கள் மற்றும் பாடங்களுக்கான சிறப்பு குறிப்புக்கள் அடங்கிய தொகுப்பு போன்றவை பிரதி செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இச் செயற்பாடு ஆனது மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான வினாப்பத்திரங்கள் மற்றும் சிறப்பு குறிப்புக்கள் அடங்கிய தொகுப்பு போன்றவை பிரதி செய்து வழங்கப்பட இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.