பனங்காடு பாலத்தினை கடந்து பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளின் ஆரம்ப நிகழ்வு இன்று….

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பல வருடங்களாக குடிநீர் தேவைப்பாடு காணப்பட்டு வந்த நிலையில் பிரதேச மக்களால் பலரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்காக பல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில்.
குறித்த மக்களுக்கு பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு செல்வதற்கு நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 90 மில்லியன் முதற்கட்ட வேலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த வகையில் இன்றைய தினம் (04.03.2021) வெள்ளிக்கிழமை பனங்காடு பாலத்தினை கடந்து பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளுக்கு
சுத்தமான குடிநீர் இணைப்பு கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இன் நிகழ்வின் ஆலையடிவேம்பு பிரதேசத்தினை சேர்ந்த பிரமுகர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் மற்றும் குறித்த வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்ட பலரும் கலந்துகொண்டு குறித்த செயல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.