இலங்கை
விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, உதய கம்பன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த இருவரும் அண்மைக்காலமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை நேரடியாகவே விமர்சித்திருந்தனர். குறிப்பாக ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை விமர்சித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.