இலங்கை
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27/02/2022) மாலை 4 மணியளவில் திரு. அ. ரவிந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் சிறப்பு அதிதியாக ரா. விஜயபாலன் ஜீ அவர்களும்,
மேலும் இன் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ. வாசுதேவன் ,அவர்களும் அகில இலங்கை இந்து ஸ்வயம்சேவக சங்க செயலாளர் வாமதேவன் ஜீ, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கர் இரா. குணசிங்கம்,மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் விடுகை பெற்று செல்லும் மாணவர்களினால் கலை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.