கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிப்பு…

கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் திருவெம்பாவை திருவாதிரை தினம் அன்று (20) ஆலய மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மகேந்திரன் அவர்கள் சுமார் 30 வருடங்களாக பெரிய பிள்ளையார் ஆலயத்தில் அறிவிப்பாளராக சேவையாற்றி வந்ததுடன் மேலும் தன் திறமையால் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள சகல ஆலயங்களின் உற்சவத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை நிலைநிறுத்தியவர் என்பதுடன்.
முன்னாள் ஊர்ப்போடியார் திரு. சிவஞானமூர்த்தி ஐயாவினுடைய வழிகாட்டுதலில் தனது அறிப்பாளர் திறமையை மேம்படுத்திக்கொண்டார். அக்கரைப்பற்று பகுதியில் யாராலும் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு தனது அறிவிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தமைக்காக அவரை பாராட்டி கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய கடந்த குடமுழுக்கு பெருவிழா திருப்பணிகள் கலைநயமிக்க சிற்ப சித்திர வேலைகளை சிறப்புற செய்த கிழக்கின் கலைப்பொக்கிசமான கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் விசேட திறமை உடையவர்களை கௌரவித்து வருவதுடன் இதனுடாக இளைய சமுதாயத்தினரையும் சமூகம் சார்ந்து செயல்பட ஊக்கமளிக்க கூடியதாக இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது வரவேற்கதக்க விடயமாக காணப்படுகின்றது.