ஆலையடிவேம்பு
திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் பிரியாவிடை நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட தேவகிராம திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் என்பவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21) பாடசாலை அதிபர் ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலை மாணவர்களினால் இசைவாத்தியங்கள் இசைக்கப்பட்டு இடமாற்றம் பெற்று செல்லும் திரு. பரமசிவன், திருமதி S.ஜேகப்பிரியன் , திரு. திலகேஸ்வரன் ஆகிய ஆசிரியர்கள் மற்றும் கிரிதரன் கல்விசாரா ஊழியர் என்பவர்கள் வரவேற்கப்பட்டு நினைவுப்பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சிறந்த முறையில் திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மேலும் குறித்த நிகழ்வினை தேவகிராம உதவி பங்குதந்தை அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.