இலங்கை
அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் நியமனம்.

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ் நியமனமானது பொது நிர்வாக அமைச்சினால் இவ் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.