வைத்திய சிகிச்சைக்கான உதவி வழங்கல் நிகழ்வு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் அவர்களின் தலமையில் திரு.இ.கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று …..

திருக்கோவில் – பிரிவு 03 இல் வசிக்கும் ஓர் தாயின் இரண்டு வயது பிள்ளையின் கண்பார்வைக்காக அவர்களது வீட்டில் ஓர் அறை அமைக்கப்பட்டு அவ்வறை கருமை நிறமாக அமையும்படி நிலம், சுவர், கூரை அனைத்தும் அமைக்கப்பட்டு அறையினுள் அனைத்து வர்ணங்களிலுமான வெளிச்சங்கள் பொருத்தப்பட வேண்டியது அப்பிள்ளையின் பார்வை நரம்புகள் தூண்டப்பட்டு பார்வை சரிவரும் என்பது தொடர்பான கண் சிகிச்சை வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கு அமைய அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் திரு.வே.வாமதேவன் அவர்களின் தலமையில்.
சுவிஸ் ரிசினோவில் வசிக்கும் திரு.இ.கணபதிப்பிள்ளை அவர்களின் மகனின் பிறந்தநாள் வைபவத்தை முன்னிட்டு வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கண் சிகிச்சைக்கான ஓர் அறை அமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம் நிதி உதவி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சமூக சேவை செயற்பாட்டாளர் திரு.க.தயாபரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.