திருக்கோவில் பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு செயல்திட்டம்: டெங்கு நோய் அபாயம் கொண்ட இடங்களை இனங்கண்டு அவ் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை!

-ஜே.கே.யதுர்ஷன்-
டெங்கு ஓழிப்பு செயல்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் Dr.P.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஓழிப்பு செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது காணப்படுகின்ற சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் பெருகும் அபாயம் தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில்.
திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr.P.மோகனகாந்தன் தலைமையில் டெங்கு நோய்கட்டுப்படுத்தும் குழுவினரால் கடந்த (07.12.2021) திகதியில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு சோதனைகள் இடம்பெற்று வருவதுடன் இந் டெங்கு நோய் அபாயம் கொண்ட இடங்களை இனங்கண்டு அவ் நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
மழையுடான தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதனால் வடிகான்கள், வீட்டின் கூரைகளில் நீர் தேங்குவது, குளிர்சாதன பெட்டியின் பின்பகுதி என்பவற்றில் நீர் தேங்குவதால் அவற்றை தினசரி பார்வையிட்டு சுத்தம் செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே பொது மக்கள் உங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருங்கள் டெங்கு நோயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்.