ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச வீடுகள் மற்றும் ஆலயங்களில் கார்த்திகை தீப வழிபாடுகள்….

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதுடன் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா (18. 11. 2021) இன்று கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச ஒரு சில ஆலயங்களில் மாலை வேளையில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் தீபங்களும் ஏற்றப்பட்டது.
மக்களும் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு வழிபாடுகளிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடியும் வருகின்றனர்.