உலகம்
ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன.
சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற மிகவும் எதிர்பார்ப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஊடகவியலாளர்கள் இரு நாடுகளிலிருந்தும் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை இந்த ஒப்பந்தம் “ஒரு வருடத்திற்கும் மேலாக கடினமான பேச்சுவார்த்தைகளின்” விளைவு என அரசாங்க ஊடகமான சைனா டெய்லி கூறியது.
மேலும் இரண்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களின் விசாக்களின் செல்லுபடிக்காலத்தை மூன்று மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரித்துள்ளது.