ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் இரு குடும்பங்களுக்கு அடிக்கல் வைத்தல் நிகழ்வு….

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பனங்காடு கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் (Rs.300,000/-) பெறுமதியில் இரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதற்கான நிதி அனுசரணையை இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் சமூக சேவை செயற்பாட்டாளர் திரு.க.தயாபரன், சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.