ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) பாடநெறி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று…..

சிவனருள் பவுண்டேசனால் லண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) நான்கு மாதகால பயிற்சி நெறி சிவனருள் கணனி தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ரி.சிவனேசன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எல்.சரவணபவன், பயிற்றுவிப்பாளர் திரு.பர்ஜான் , சிவனருள் பவுண்டேசன் தலைவர்.கலாநிதி.அனுசியா சேனாதிராஜா, செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர் திரு.ரி.ஜனார்த்தனன் மற்றும் பயிலுனர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கணனி நிலையமானது மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு செயற்படும் ஓர் கணனி நிலையம் என்பதுடன் இப்பிரதேச இளைஞர் யுவதிகள் கணனி தொழில்சார் கற்கைநெறிகளை பூர்த்தி செய்வதற்கு இந்நிலையம் பேருதவியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.