மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி திருக்கோவில் பிரதேச பெண்கள் அணியினர் முதலிடம்….

ஜே.கே.யதுர்ஷன்
33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட பொது மைதானத்தில் பெண்கள் அணிகளுக்கான கிரிக்கட் போட்டியானது இன்று (08) இடம்பெற்றது.
இவ் பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் அம்பாறை மாவட்டதில் இருந்து மூன்று அணிகள் பங்கு பற்றியதுடன் அவ் மூன்று அணியில் திருக்கோவில் பிரதேச பெண்கள் அணி வீராங்கனைகள் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
மேலும் இவ் அணியினர் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட கிரிக்கெட் போட்டில் விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் சுற்றுப்போட்டியில் முதல் சுற்றுப்போட்டியானது கல்முனை வடக்கு பிரதேச பெண்கள் அணிக்கும் உஹனை பிரதேச பெண்கள் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இச் சுற்றுப்போடியில் உஹகனை பிரதேச செயலகப்பெண்கள் அணியினர் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகி மேலும் உஹனை பிரதேச செயலக பெண்கள் அணிக்கும் திருக்கோவில் பிரதேச செயலக பெண்கள் அணிக்கும் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் திருக்கோவில் பிரதேச பெண்கள் அணியினர் முதல் இடத்தை பெற்றனர்.
மேலும் இவ் வீராங்கனைகளை தலைமை தாங்கி சென்ற அம்பாறை மாவட்ட திருக்கோவில் இளைஞர் சேவைகள் அதிகாரி .கு.பிரபாகரன் ,மக்கள் சேவை ஒன்றிய தலைவர்.பி.நிஷாந்தன் மற்றும் விளையாட்டு பயிற்சிவிற்பாளர் N.லவகேஸ்வரன் ஆகியோர் இந் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மேலும் இவ் போட்டிகளில் திருக்கோவில் பிரதேச பெண்கள் அணியினர் முதலாம் இடத்தையும் உஹணை பிரதேச செயகபெண்கள் அணியினர் 02 இடத்தையும் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பெண்கள் அணியினர் 03 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.