அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வு…..

(செல்வி வினாயகமூர்த்தி)
இறைவனைவிட்டு இமைப்பொழுதும் நீங்காத வரம் வேண்டும் என்பதற்காக அன்னை இருந்த விரதம் தான் கேதார கௌரி விரதமாகும். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் தனது இடப்பாகத்தை கொடுத்ததாக புராணகதைகள் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க கேதாரகௌரி விரதமானது கடந்த ஐப்பசி மாதம் 15 நாள் ஆரம்பமாகி அக்டோபர் 04ம் நாளானா இன்று தீபாவளித் திருநாளுடன் 21 வது விரத முடிவு நாளான ஐப்பசி அமவாசையில் காப்புக் கட்டுதலுடன் நிறைவு பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் காப்பு கட்டும் நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலய மூல மூர்த்தியின் அபிஷேகம் சிவலிங்க, பார்வதி அபிஷேகம் இடம்பெற்றதுடன் தீபாவளி திருநாளான இன்று திருவிளக்கு பூசையுடன் கௌரி விரத விஷேட பூசைகள் நடாத்தப்பட்டதுடன் காப்பு கட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.