ஆலையடிவேம்பு
தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு

வருடம் தோரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஸ்ரிக்கபடுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் சிறுவர்களை கௌரவிக்கும் முகமாக அப் பாடசாலை அதிபர் திருமதி. சோமபால அவர்களின் தலைமையின் கீழ் ஆசிரியர்களால் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாணவர்களிடையே அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டத்தோடு சகல மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் அப் பாடசாலை மாணவர்களால் ஆசிரியர்களுக்காக முதியோர் தினமும் அனுஸ்ரிக்கப்பட்டது. இதன்போது கயிறு இழுத்தல், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுகள் ஆசிரியர்களிடையே இடம்பெற்றது.