ஒரு இலட்சம் வேலைவாய்ப்பும் நியமன கடிதம் வழங்கல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் தலைமையில்…

ஜே.கே.யதுர்ஷன்
நாடு முழுவதும் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கௌரவ மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களது சிபாரிசின் பேரில் 600 பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமானது மூன்று கட்டமாக வழங்கப்படுகின்றது.
மேலும் இந்த வேலை வாய்ப்பு வழங்கு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் இரண்டாம் கட்ட வேலை வாய்ப்புக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந் அரச தொழில் வாய்ப்புகள் எனும் போது குறைந்தபட்ச கல்வித் தகமை என்பது முக்கியமானது குறைந்தபட்சம் சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றோருக்கான அரச தொழில் வாய்ப்பு பெறுவது சாத்தியமானது. ஆனால் இம்முறை அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் ‘படிக்க தவறியவர்கள்’ தொழில் வாய்ப்பினை பெறுவதை நோக்கமாகக் கொண்டு சாதாரண தரக்கல்விக்கு குறைவாக கல்வி கற்றோருகாக இந்த வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந் திட்டம் சம்மந்தமான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தொழில் வாய்ப்பில் எனது சிபார்சின் பேரில் சிலரது வாழ்க்கையில் ஒளியூட்டியதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.