திருக்கோவில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் நகை தொழிலகம் ஒன்றில் இடம் பெற்ற திருட்டு: சம்பவ இடத்திலே திருடன் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு! மேலதிக விபரம்….

-ஜே.கே.யதுர்ஷன்-
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள நகை தொழிலகம் ஒன்றில் இன்றைய தினம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இன்று பிற்பகல் 4.00 மணியளவில் திருக்கோவில் விநாயகபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள உஷா நகை தொழிலில்தில் இந் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ் குறித்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை திருக்கோவில் பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த நபர் கைவசம் மிளகாய் தூள் கொண்டுவந்துள்ளதாகவும் அவ் தூள்ளை கொண்டு கடையில் இருந்தவர் மேல் தாக்கியுள்ளதாகவும் அவ் மிளகாய் தூள் தாக்குதலில் இருந்து கடையில் இருந்தவர் அதிஷ்ர வசமாக தப்பியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.