இலங்கை
ஆதி மலையடி நாகசிவன் சிவபீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று…

திருமலை மாவட்டம், வெருகல், மாவடிச்சேனை கிராம மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்களின் நீண்டகால இறை வழிபாட்டு வரலாற்றைக் கொண்ட ஓர் மலையில் சிவபீடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் (12) அக் கிராம மக்களால் பிரதிட்டை செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவனருள் ஸ்தாபகர் வைத்திய கலாநிதி ஜெ.நமசிவாயம் அவர்களும், திரு.அ.கமலமூர்த்தி, சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சிவபீட நிர்மானப் பணிகள் அமரர்.வைத்தியர் கார்த்திகேசு ஜெகன்மோகன் அவர்களின் ஞாபகார்த்த அனுசரணையாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இச்சிவபீடம் அக்கிராமத்தில் “ஆதி மலையடி நாகசிவன் ஆலயம்” ஆக மேம்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.