இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று நண்பகல் 12.30 மணிவரை இ.கி.தேசிய பாடசாலையில்: MOH ஆலையடிவேம்பு.

-கிரிசாந் மகாதேவன்-
20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் அவர்களின் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இன்று (01/10/2021) மதியம் 12.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் செயற்பாடுகளுக்காண பங்களிப்பினை ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.