இலங்கை
கல்முனை வடக்கு , நாவிதன்வெளி பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு இன்று…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று (22.09.2021)
கல்முனை வடக்கு , நாவிதன்வெளி ஆகிய பிரதேச இந்து ஆலையங்களை செய்வதற்கான புனரமைப்பு நிதி நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்கள் தலைமையில் அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள் மேலும் குறித்த ஆலயங்கள் சார்ந்த பிரதிநிதிகள் என்பவர்கள் சுகாதார நடைமுறைகளுடன் பங்கேற்புடன் இடம்பெற்றது.