திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) அரசின் கட்டுப்பாட்டு விலை கண்காணிப்பாளர்கள் நியமனம்.

அரசினால் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலைகளில் மக்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றார்களா என்பதனை கண்காணிக்கும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலயத்தில் பிரதேச செயலாளர் ரீ கஜேந்திரனினால் இன்று (10) இடம்பெற்று இருந்தன.இவ் நியமனங்கள் பாவனையாளர்கள் அதிகார சபையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பிரதேச செயலாளரின் நிருவாக எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் அரசின் சுற்று நிருபத்திற்கு அமைவாக கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை முன்னெடுக்கப்படுகின்றனவான என கண்காணித்து பாவனையாளர் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தருக்கு அறிக்கை இடுதல் இவர்களின் பணியாகும்.
இவ்வாறு இவ் கண்காணிப்பாளர்களினால் அறிக்கை இடும் வர்த்தகர்களுக்கு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை உத்தியோகத்தர் மேற்பார்வையின் ஊடாக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா அம்பாரை மாவட்ட உதவி விசாரணை உத்தியோகத்தர் ரீ.சுதர்ஷன் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.