ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 05 ஆவது மரணம் இன்று:கொரோனா நிலவரம் தீவிர நிலையில் 181 தொற்றாளர்கள் இதுவரை!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் பின்னர் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 181 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (10) ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் கொவிட்-19 காரணமாக மரணம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலைலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ் அகிலன் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரை ஐவர் மரணம் அடைந்துள்ளதுடன் நேற்றய தினத்தில் மாத்திரம் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் நிலைமை உணர்ந்து பொறுப்புடன் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுகின்றார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ் அகிலன் அவர்கள்.
மேலும் பிரதேச ஆலய நிர்வாகத்தினரும் ஆலயத்தில் பக்தர்கள் நடமாட்டத்தை முடிந்தவரை தற்போதைய நிலை அறிந்து கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதுடன் கர்ப்பிணி தாய்மார்களும் கூடிய கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.