தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்துவைப்பு…

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் யாவருக்கும் குடிநீர் எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக சகல கிராமங்களும் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் அக்கரைப்பற்று-08 ஆம் பிரிவில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக (04.08.2021) நேற்றய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டது.
எமது பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட குறித்த அலுவலகம் ஊடாக வாரத்தின் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு தொடர்பில் தேவையான சகல நடவடிக்கையினையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதுடன் குறித்த உப அலுவலகத்தின் மூலம் 8400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி – முகநூல் பக்கம் Divisional Secretariat, Alayadivembu