விளையாட்டு
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 181 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஸ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.