தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு: ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!!

-கிரிசாந் மகாதேவன்-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி இருந்த நிலையில் மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில், மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு, வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்காக அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில் இன்றைய தினம் மதுபானசாலைகள் திறப்பதற்கு காலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் இரு மதுபானசாலைகளும் திறக்கப்பட்டது.
இவ்வாறு திறக்கப்பட்ட மதுபான சாலைகளுக்கு முன்பாக பலர் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல் மதுபான கொள்வனவுக்காக ஒன்றுகூடி இருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.