இலங்கை
உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள்.
மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.