நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலைமைகள் என்ன!!!

-கிரிசாந் மகாதேவன்-
கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில்.
நாளை (20.06.2021) அதிகாலை 4.00 மணி முதல் (23.06.2021) புதன்கிழமை இரவு 10.00 மணிவரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருக்கின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் பலரும் தொழிலை இழந்து வீடுகளில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன் நிலை காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தினை மேன்படுத்த நன்கொடையாளர்களாள் உலர் உணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் பல அமைப்புகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தை மேன்படுத்த நாளுக்கு நாள் கட்டம் கட்டமாக உலர் உணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு நாளாந்தம் அன்ரிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தடுப்பு செயற்பாடானது மிகவும் சிறந்த முறையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களும் பயணக்கட்டுப்பாட்டின் அனுகூலத்தை கருத்தில் கொண்டு பயணகட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
நாளைய தினம் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் என்பன திறக்கப்பட இருக்கிறது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினை கருத்தில்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டினை விட்டுவெளியேற வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.