ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு 230 குடும்பங்களுக்கு சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு.

கொவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலக பிரிவில் 230 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு அளிக்கம்பை – 23 கோளாவில் (1) , கோளாவில் (2) , ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா, அக்கரைப்பற்று (09), அக்கரைப்பற்று (7/3), அக்கரைப்பற்று (8) ஆகிய கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு Rs.1,300/- பெறுமதியிலான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.