பாடசாலை அதிபர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு இணையவெளியில் கல்வி தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான data வசதியினை பெற்றுக்கொடுக்க Alayadivembuweb.lk இணையக்குழு நடவடிக்கை….

”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழுவினரால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடும் கடந்த வருடம் 14.09.2020 மற்றும் 15.09.2020 ஆகிய இரு தினங்களில் ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கருத்திட்டத்துக்கு அமைவாக எமது பிரதேச மக்களால் தன்னார்வமாக வழங்கப்பட்ட நிதி உதவியினை பெற்று சேமித்து கொரோனா நிலை எமது பிரதேசத்தில் தீவிரம் அடைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கல் எனும் தூரநோக்கு செயத்திட்டமாக செயப்படுத்தப்பட்டது.
மக்களின் நிதி உதவி மூலமாக 12,106/- (பன்னிரெண்டாயிரத்து நூற்று ஆறு ரூபாய்) பணம் கிடைக்கப்பட்டது. குறித்த பணமானது எமது பிரதேசத்தில் கொரோனா தொடர்பான முடக்கம் எமது பிரதேசத்தில் ஏற்பட்டால் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகம் பயனடையும் முகமாக . பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தோம்.
அதற்கு அமைய குறித்த பணத்தொகையானது ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை
மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக ”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேம்பாட்டுத்திட்டம்” எனும் எண்ணக்கருவில் முதற்கட்டமாக பாடசாலை அதிபர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இணையவெளியில் கல்வி தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான data வசதியினை பெற்று கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை அதிபர்கள் பரிந்துரை செய்த மாணவர்களுக்கு குறித்த வசதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இணையக்குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்திட்டம் மூலமாக கட்டாயத் தேவை உடைய, எங்களால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனையுடன் பொருந்தக்கூடிய மாணவர்கள் எவருக்கேனும் கல்வி தேவையினை பூர்த்தி செய்வதற்கு data வசதி பெற்றுத்தர வேண்டுமெனின் எமது இணையக்குழுவுடன் 0771925225 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை மேற்கொள்ளவும். மேலும் இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் குறித்த இலக்கத்துடன் தொடர்வை ஏற்படுத்தவும்.