விளையாட்டு
இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிக்காக 24 பேர் அடங்கிய அணி விபரம்

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிக்காக 24 பேர் அடங்கிய அணி பெயரிடப்பட்டுள்ளது. சரித் அசலங்க, தனஞ்சய லக்ஷன், இஷான் ஜயரத்ன ஆகியோர் புதிய வீரர்களாக இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நுவன் பிரதீப், ஓஷத பெர்னான்டோ ஆகியோர் அணியில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி அணியில் இருந்த அஷேன் பண்டார, சதீர சமரவிக்கிரம, கமில் மிஷார, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் போது குஷல் ஜனித் பெரேரா ஒருநாள் மற்றும் 20-20 அணிகளுக்கு தலைமை தாங்க உள்ளார்.