பணம், பரிசுகளை வென்றதாக கூறி மோசடி : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

பணம் மற்றும் பரிசுகளை வென்றதாகக் கூறி மோசடி செய்திகளைப் பெறும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. கையடக்க தொலைபேசி பயனர்களால் பல மோசடி செய்திகள் பெறப்படுவது அவதானிக்கப்படுவதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த போலி பணம் மற்றும் பரிசுகளை கோருவதற்கு எந்தவொரு கொடுப்பனவை செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதற்காக, இந்த மோசடி செய்திகளைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ([email protected]) திறக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை அல்லது பரிசுகளை வென்றிருக்கிறீர்கள் என்று கவர்ந்திழுக்கும் செய்திகளை நீங்கள் பெற்றால், கையடக்க சேவை வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்தோ கிடைப்பதை உறுதிச்செய்து கொள்ளுங்கள்.
அத்துடன் , தயவுசெய்து பணம் செலுத்துவதைத் தவிர்த்து, எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர்வதைத் தவிர்க்குமாறும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையகம் கேட்டுள்ளது.