இலங்கை
இந்தோனேசிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பா!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குறித்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நண்பகல் 12 மணியளவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.