ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி சத்ய சாயி சேவா நிலையத்தில்…

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.
இவ் இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்தில் எதிர்வரும் 15.05.2021 அன்று நடைபெற இருக்கின்றது.
குறித்த தினம் காலை 8 மணிக்கு ஆரம்பமாவுள்ள இந்நிகழ்வில் கொடையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
சன நெரிசலைக் குறைப்பதற்காக, 0770131047 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, வழங்கப்படும் குறித்த நேரத்தில் சென்று இரத்த தானம் வழங்குமாறும் மற்றும் இனம் மொழி மத பேதமின்றி அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுக்கின்றனர் ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்.