கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி! காரணம் என்ன?

திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் திருமதி அழகு ராணிப்போட்டியில் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் புஸ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு முடிசூடிய போது,
அவர் விவாகரத்துப் பெற்றவர் என்ற காரணத்தை குறிப்பிட்டு அவருடைய கிரீடத்தை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு அணிவித்திருந்தார்.
இது தொடர்பில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரிக்கு எதிராக புஸ்பிகா டி சில்வா கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது புஸ்பிகா டி சில்வாவின் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி பொலிஸ் நிலையம் சென்றிருந்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கரோலின் ஜூரியின் நடத்தையை போட்டியின் அமைப்பாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு கண்டித்தனர்.
சட்டப்பூர்வமாக திருமணமான எந்தவொரு போட்டியாளரும் போட்டியில் பங்கேற்கலாம் என்றும் அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.