ஐந்து லட்சம் இந்திய தடுப்பூசிகள் ஏப்ரல் 10ம் திகதி வரும்!- இராணுவத் தளபதி


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனேகா தடுப்பூசியின் தாமதத்தின் காரணமாகவே இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் ஏப்ரல் 10ம் திகதிக்குள் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறுமெனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரிலேயே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன. இவை இலங்கையில் வசிக்கும் சீன பிμஜைகளுக்கே முதலில் வழங்கப்படவுள்ளதுடன் இலங்கையின் சீன தூதரகத்தின் ஒருங்கிணைப்பிலேயே அவை வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் 19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையாலேயே தடுப்பூசி இறக்குமதி செயற்பாடுகள் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டன. இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 500,000 தடுப்பூசிகள் இம்மாதம் 10 ஆம்
திகதிக்குள் இலங்கையை வந்தடையுமெனவும் அதன் பின்னர் இலங்கையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



