உலகம்
சீனாவின் கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு!

சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை இரவு இதை வெளிப்படுத்தினர்.
இதேவேளை ஹாங்காங்கில் ஐந்தாவது அலை கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் நகரத்தை ஆட்கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஹாங்காங் 20 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 வழக்குகளை எதிர்கொள்கிறது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமையன்று 47 புதிய வழக்குகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்