பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் நல்லிணக்க மகளிர் தின சிறப்பு நிகழ்வு தம்பட்டையில் இன்று….

வி.சுகிர்தகுமார்
சர்வமத தலைவர்கள் மற்றும் மகளிர் அமைப்பு பிரதிநிதிகளையும் இணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலாக ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் தம்பட்டை சுவாட் மண்டபத்தில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் வாணி சைமன் திட்ட இணைப்பாளர் சுமந்தி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஈரோப்பியன் யூனியன் மற்றும் யு.என்.டி.பி நிறுவனங்களின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பல் சமூக தலைவர்கள் பெண்கள் ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகளிரின் தின நிகழ்வுகளின் ஊடாக சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனும் கருப்பொருளில் ஆரம்பமான நிகழ்வுகளில் தீபங்கள் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
பின்னர் சர்வமத தலைவர்களின் ஆசியுரையும் தொடந்து மகளிர் தின கொண்டாட்டங்கள் தொடர்பான உரைகளும் இடம்பெற்றன.
பின்னரா மகளிர் தினம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உரை நாடகம் பேச்சு பட்டிமன்றம் கவிதை நகைச்சுவை செய்தி வாசிப்பு போன்ற சுவாரசியமான நிகழ்வுகளும் கிராம மட்ட மாதர் சங்க அமைப்புக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் அரங்கேற்றப்பட்டன.
இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் மூவினத்தையும் சேர்ந்த அதிகளவானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.