கொரோனா தொடர்பில் தற்போதைய நிலவரம்!

இலங்கையில் நேற்றைய தினம் (26) covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களுள், 748 பேர் இந்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், ஏனைய 7 பேரும் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் (369 பேர்) கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது, கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 62 பேரும், கொழும்பு கோட்டையில் 20 பேரும், மருதானையில் 11 பேரும், புதுக்கடையில் 10 பேரும், மட்டக்குளியில் 12 பேரும், மொரட்டுவயில் 11 பேரும், பாத்துக்கயில் 14 பேரும், பண்ணிட்டிய மற்றும் பிலியந்தல பகுதிகளிலிருந்து தலா 9 தொற்றாளர்களும், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் 10 பேரும் நேற்றையதினம் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும், நிட்டம்புவ பிரதேசத்தில் 15 பேரும், யக்கலவில் 10 பேரும், ராகமையில் 13 பேரும், கடவத்தயில் 7 பேரும் தொம்பேயில் 6 பேர் மற்றும் வெலிவேறிய பிரதேசத்தில் 8 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் களுத்துறை மாவட்டத்தில் 80 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களுள் 65 பேர் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கண்டி மாவட்டத்தில் 23 பேரும், காலி மாவட்டத்தில் 18 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 15 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 17 பேரும் ,வவுனியா மாவட்டத்தில் ஒருவரும், நுவரெலியா மாவட்டத்தில் 2 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவரும், குருநாகல் மாவட்டத்தில் 29 பேரும், அனுராதபுர மாவட்டத்தில் 14 பேரும், பொலன்நறுவை மாவட்டத்தில் 6 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 22 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 5 பேர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் களுத்துறை மாவட்டத்தில் 72 பேரும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 203 பேரும் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இலங்கையின் 18 மாவட்டங்களில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மன்னார், திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, பதுள்ள, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஒரு தொற்றாளர்களேனும் இனம் காணப்படவில்லை என உழஎனை-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் இந்நாட்டில் 16,431 பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தின் முதல் 26 நாட்களுக்குள் இந்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,461 ஆகும்.