இலங்கை
பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

2020 ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.