உலகம்

20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா!

ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது.

20 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது.

ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ள Su-57 குறித்த அறிவிப்பு 2002ஆம் ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு சுகோய் 57 ரக முதல் விமானம் தயாரிக்கப்பட்டு விட்டது.

எனினும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இந்த நிலையில், சிரிய நாட்டு வான்பரப்பில் போர்களத்திலேயே இரண்டு ஆண்டுகளாக சுகோய் விமானத்தின் பரிசோதனைகள் நடைபெற்று வந்தன.

எனினும், சுகோய் 57 ரக விமானங்கள் ஏவுகணைகளேயோ அல்லது வெடிகுண்டுகளையோ வீசாமலேயே பரிசோதனையில் பங்கேற்றன. பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து, ரஷ்ய விமானப்படையில் முதல் சுகோய் 57 ரக போர் விமானம் டிசம்பர் 25ஆம் திகதியன்று இணைப்பட்டது.

ஒற்றை இருக்கை இரட்டை இன்ஜீன் கொண்ட ரஷ்யா சுகோய் 57 ரக விமானத்தை ரஷ்யாவின் சுகோய் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானமனங்களான எப் 22 மற்றும் எப் 35 ரக போர் விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்களை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. தற்பொழுது, பயன்பாட்டிலுள்ள ஐந்தாம் தலைமுறை போர்விமானங்கள் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், ரஷ்யா சுகோய் 57 ரக விமானத்தை தயாரித்து வந்தது.

ரேடார் அனுப்பும் சிக்னல்கள் இந்த விமானங்களின் மீது பட்டால் சிக்னல்களை தன் உலோக அமைப்புகள் அல்லது அதன் மீது பூசப்படும் பெயிண்டுகளே உறிஞ்சு வைத்துக் கொள்ளும். கம்ப்யூட்டர் பைலட் என்ற விமானிதான் சுகோய் 57 ரக விமானத்தின் துணை விமானியாக கருதப்படுகிறது.

காக்பீட் அறையில் உள்ள நவீன கணிணி மூலம் விமானத்தின் உட்புற மற்றும் வெளிப்பூற அழுத்தங்கள் கணிக்கப்பட்டு பறக்கும் உயரம், வேகம் ஆகியவற்றை கணித்து தானாகவே விமானத்தை பறக்க வைக்கும். இதனால், இந்த கணிணியை electronic second pilot என்று அழைக்கிறார்கள். ஹைப்பர்சானிக் ஏவுகணைகளையும் இதில் பொருத்த முடியும். தற்போதைய நிலையில் உலகின் ஆபத்தான போர் விமானம் இதுதான்.

அமெரிக்காவின் நவீன போர் விமானமான எப் 35 ரக போர் விமானத்தை விட சுகோய் 57 அதிநவீனமானது. ரஷ்யாவின் சுகோய் 57 போர் விமானம் மணிக்கு 1,600 மைல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவின் எப் 35 விமானம் 1,200 மைல் வேகம் பறக்கக் கூடியது.

சுகோய் விமானத்தில் 22,000 கிலோ எடை வரை ஏவுகணைகளை சுமக்க முடியும். அதோடு மொத்தம் 78,300 கிலோ எடையுடன் மேல் எழும்பும் திறன் கொண்டது. எப்- 35 ரக போர் விமானம் 70, 000 கிலோவுடன் மேல் எழும்பும். 20, 000 கிலோவரை வெடி பொருள்களை சுமக்கும் திறன் கொண்டது. சுகோய் 57 போர் விமானத்தில் அதிகபட்சமாக 65,000 அடி உயரம் வரை பறக்கும். எப் 35 ரக விமானத்தால் 50,000 அடி உயரம் வரைதான் பறக்க முடியும்.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் 76 சுகோய் 57 ரக போர் விமானங்கள் ரஷ்ய விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker