ஆலையடிவேம்பு

ராம்கராத்தே சங்கம் மீண்டும் தேசிய சாதனை!

வி.சுகிர்தகுமார்

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (Srilanka Karate do Federation) இணையவழி மூலம் நடாத்தப்பட்ட சிரேஸ்ட வீரர்களுக்கான தேசிய மட்ட E – KATA சுற்றுப்போட்டியில் (E-Kata National Championship ) ராம் கராத்தே தோ சங்க (Ram Karate do Organization) அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது தேசிய ரீதியிலும் சாதனையை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் 61-65 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான E – KATA போட்டியில் ராம்கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான். கே.கேந்திரமூர்த்தி தேசிய ரீதியில் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

51-55 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான E – KATA போட்டியில் ராம்கராத்தே சங்கத்தின் சிரேஸ்ட போதனாசிரியர் சென்சி. எம்.முரளீஸ்வரன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்னை பெற்றுக்கொண்டார்.

46-55 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான E – KATA போட்டியில் ராம்கராத்தே சங்கத்தின் சிரேஸ்ட போதனாசிரியர் சென்சி எம்.திருக்குமார் மற்றும் சென்சி ரி.பாலகிருஸ்ணன் ஆகியோர் மூன்றாம் இடத்தை பெற்று இரு வெண்கலப்பதக்கத்தினையும் வென்றெடுத்தனர்.

இவர்களது இச்சாதனை தொடர்பில் ராம் கராத்தே தோ சங்கத்தின் ஆலோசகர் தலைவர் செயலாளர் போதானாசிரியர்கள் சிரேஸ்ட கனிஸ்;ட கறுப்புப்பட்டி மாணவர்கள், ஏனைய கராத்தே மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் மண்ணிற்கு பெருமை தேடித்தந்துள்ள வீரர்களுக்கு பாராட்டினையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் தொடர்ந்தும் ராம்கராத்தே சங்கம் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மாகாண தேசிய சாதனைகள் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker