ஆலையடிவேம்பு
உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் உள்ளிருந்து உணவருந்த முடியாது – ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் (அக்கரைப்பற்று தெற்கு) தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் உள்ள உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
திறக்கப்படுகின்ற அனைத்து உணவகங்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் உணவகங்களுக்குள் இருந்து மக்கள் உணவருந்த முடியாது எனவும் தேவையான உணவை வாங்கிச் செல்ல முடியும் எனவும் கூறினார்.
இதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் எக்காரணத்தை கொண்டும் அப்பகுதிக்குள் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறானவர்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் இராணுவத்தினர் என பல்தரப்பினர் கண்காணிப்பர் எனவும் குறிப்பிட்டார்.