ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, இன்று (17) இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் ஆயுர்வேத மாகாண ஆணையாளர் Dr. இ.சிறிதரின் ஆலோசனை யில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை Dr.ஜி.சுகுணன், பிராந்திய தொடர்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கல்முனை Dr.M.A நபீல் அவர்களின் வழிகாட்டலில் மருத்துவ பொறுப்பதிகாரி , ஆயுர்வேத மத்திய மருந்தகம், ஆலையடிவேம்பு Dr.த.குவிதாகரனுடன் கௌரவ தவிசாளர் த.கிரோஜாதரன், பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் என்பவர்கள் இணைந்து இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) வழங்கிவைக்கப்பட்டது.