நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!

ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து இருந்தது.
இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன் 11587 அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 468 பேர் தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 80 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் அத்தகவல்களில் குறிப்பிடப்படுள்ளது.
மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பிரதேசம் நாளை காலை முதல் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் ஆலையடிவேம்பில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் நாளை காலை முதல் விடுவிக்கப்பட உள்ளது.
இன் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் அகிலன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விடுவிப்பு பிரதேசங்களில் இருந்து மக்கள் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு செல்ல தடை. இதேநேரம் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதுடன் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும் கூறினார். மேலும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு எமது பிரதேசத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.