பல அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிவரை முன்னேறி உதயம் விளையாட்டு கழகம் Runner up ஆக தெரிவு!!

கோளாவில் Lions விளையாட்டு கழகம் நடாத்திய 8 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்றய தினம் (07) காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற போட்டிகளில் young star விளையாட்டு கழகம் மற்றும் உதயம் விளையாட்டு கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டிகளில் மோதியது.
இவ் இறுதிப் போட்டியில் எமது ஆலையடிவேம்பை சேர்ந்த உதயம் விளையாட்டு கழகம் Runner up ஆக தெரிவு செய்யப்பட்டு அவர்களது கழகத்திற்கு பெருமை சேர்த்தது மாத்திரம் இன்றி எமது ஆலையடிவேம்பு கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளர்கள்கள்.
பல அணிகள் கலந்துகொண்டு விளையாடிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய எங்கள் உதயம் விளையாட்டு கழகத்தினருக்கும் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் எம்ஊரின் மக்களுடன் சேர்ந்து ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.