இன்று முதல் வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்கள் மக்கள் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம்

COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான வெதுப்பக (Bakery) உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நடமாடும் வாகனம் மூலமான வியாபாரிகள் மற்றும் இன்று (10.12.2020) தொடக்கம் எதிர்வரும் 18.12.2020 (வெள்ளிக்கிழமை) வரை அவர்கள் விற்பனைகளில் ஈடுபடவுள்ளார்கள்.
விற்பனையில் ஈடுபடவுள்ள கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன தொடர்பான விபரம்
எனவே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் கவனத்திலெடுத்து, இங்கு விபரம் குறிப்பிடப்பட்டுள்ள PCR பரிசோதனைகளைப் பூர்த்திசெய்துள்ள வியாபாரிகளின் வாகனங்களில் மாத்திரம் வெதுப்பக உணவுகளைக் கொள்வனவு செய்யுமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சகல பொதுமக்களையும் கேட்டுக்கொள்கின்றார்.
குறித்த வியாபாரிகள் அல்லது/மற்றும் அவர்களது உற்பத்திப் பொருட்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் தங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அவற்றைத் தெரியப்படுத்துமாறு, அல்லது 067 2277436 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக நேரடியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குத் தெரிவிக்குமாறும்
கேட்டுக்கொள்கின்றார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்.